மேல்நிலைத் தேர்வு எழுத உள்ள அன்பு மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் !
தூங்கும்போது வருவது அல்ல கனவு உங்களை தூங்கவிடாமல் செய்வதே கனவு |
மன நிறைவுக்கும் , மாசற்ற அறிவுக்கும் "கற்க கசடற! "
மனிதமும் மலர்ந்து மதிப்பெண் உயர "தொட்டனைதூறும் மணற்கேணி !"
மதிப்பெண் மட்டுமே நோக்கமாகும் பொழுது ! மனிதம் புதைக்கப்பட்டு மானிடத்தின் மரணம் விதைக்கப்படுகிறது.குறைவாகப்படிது நிறைய மதிப்பெண் பெறுவது பற்றி யோசிப்போம்
(எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு "
100 க்கு 100 மதிப்பெண் பெற:
1 . ஆசீர்வாதம் :பெற்றோர் , பெரியோர் , ஆசிரியர்களின் ஆசி முக்கியம் . நன்கு படிப்பவர்கள்கூட சில நேரங்களில் ஆசியர்களை அவமதிப்பதுண்டு ! அது கூடாது . யார் மனதையும் புண்படுத்தாத நிலையில் மனம் அமைதி பெறுவதால் நல்ல நினைவாற்றல் கிடைக்கும் . இதுதான் ஆசீர்வாதத்தின் மறுவடிவமோ!
2 . தன்னம்பிக்கை: கடவுள் நம் மனமே . கடவுள் நினைப்பது நடக்கும்தானே ? எனவே நம் மனம், ஆழ்மனம் நம்புவது நடக்கும் .
3 . உடல் நலம் : சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும் . நல்ல உடலில் தான் ஆரோக்கியமான மனம் அமையும் .நன்றாக படித்துவிட்டு தேர்வு அறையில் தூங்கிவிட்டலோ, வயிறு சரியில்லை என்றாலோ , வேகமாக எழுத முடியாமல் சோர்வாக இருந்தாலோ என்ன செய்யமுடியும் .
4 .பதட்டமின்மை : பதட்டமடைந்தால் படித்ததும் மறந்து போகும் .தேர்வுக்கு ஒரு மணிநேரம் முன்பே படிப்பதை நிறுத்திவிடுங்கள் . சந்தோசமாக இருங்கள் . சிரித்தமுகமாக இருக்க முயற்சியாவது செய்யலாமே !
டைம் மேனஜ்மென்ட் உங்கள் பதட்டத்தை குறைக்கும் . தேவையானதை மட்டும் எழுதுங்கள் .தெரிந்ததையெல்லாம் எழுதிக்கொண்டிருந்தால் நேரம் போதாது .
Thanks a lot sir.. it is very useful.. i saw this in dinakaran paper too.. thanks
ReplyDeleteAll the Best. Please download my power point presentation tips in English medium. You will find it very useful (I pray god you read this reply and view the power point tips in English Medium BEFORE GOING TO EXAM. I AM ALSO PLANING TO POST TIPS FOR CHEMISTRY WITH THE Help of a Chemistry Veteran.
Deletephysics PALANICHAMY
if u have given in english it would have been much better.. because i cant understand most of d questions in tamil..but u have mentioned d lessons.. so it is useful..
ReplyDeletesir gd ev. thank u very much. This web is very useful to me.how to download flash animation?
ReplyDelete